மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து...
ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர்படம்: எக்ஸ் / பஞ்சாப் கிங்ஸ்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்டுமென பிசிசிஐ-இடமும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ரசிகர்களின் ஆதரவினால்தான் கம்பீர் பயிற்சியாளர் ஆனதும் கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் வென்று கொடுத்தும் கவனிக்கத்தக்கது.

சையத் முஷ்டக் அலி தொடரில் ஷ்ரேயாஸ் தலைமையில் கோப்பை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பிசிசிஐ ஒப்பந்தம் இல்லாமல் இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதையும் ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் வென்றார்.

தில்லி, கேகேஆர் அணியை வழிநடத்தி இறுதிப் போட்டிக்கு கொண்டுவந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணியையும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லுவார் என எதிர்பார்க்கப்படடுகிறது.

முலான்புரில் நேற்று (ஏப்.15) நடைபெற்ற போட்டியில் 111 ரன்களை கட்டுப்படுத்தி வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். இது சாதாரண விஷயமல்ல என்றும் அவரது கேப்டன்சி (தலைமைப் பண்பு)தான் காரணம் என்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஷ்ரேயாஸின் தலைமைப் பண்பினைப் பாராட்டி வருகிறார்கள்.

முந்தைய போட்டியில் தோல்வியுறும்போது, “பந்துவீச்சாளர்களை சரியாக மாற்றி கொடுத்திருக்கலாம்” என தனது தவறை ஒப்புக்கொண்டதும் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை ஷ்ரேயாஸ் தலைமையில் வென்றால் இந்திய அணிக்கும் அவர் கேப்டனாகுவார் என்பதில் அவரது ரசிகர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com