

நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பிறகு விளம்பரம் ஒன்றில் நடித்ததுக்கு அவரது ரசிகர்களே அவரை விமர்சித்து வருகிறார்கள்.
சமூக வலைதளத்தில் பெருகும் மோசமான விமர்சனங்களுக்கு நடிகர் அஜித் பதில் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அஜித்குமார் ரேஸிங் என்ற ஒரு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். அதன் பார்ட்னராக இணைந்துள்ள கேம்பா என்ற குளிர்பானத்திற்கான விளம்பரத்தில் அஜித் நடித்த விடியோ சமீபத்தில் வெளியானது.
துணிவு திரைப்படத்தின் போது ’நல்ல படத்துக்கு புரமோஷன் தேவையில்லை’ எனக் கூறினார்.
பல ஆண்டுகளாகவே நடிகர் அஜித் குமார் தனது எந்தப் படத்தின் புரமோஷனிலும் பங்கேற்காமலே இருக்கிறார்.
தற்போது, தனது சொந்த நிறுவனத்தின் லாபத்திற்காக இப்படி செய்கிறாரே என அஜித் ரசிகர்களே அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சமூக வலைதளத்தில் இது குறித்து இரு தரப்பினரும் ஆதரவும் எதிர்ப்புமாக பதிவிட்டு வருகிறார்கள்.
பிரபல ரீல்ஸில் வருவதுபோல “எங்கண்ணனுக்கு ஒன்னுனா எங்க அண்ணனையே அடிப்போம்டா” என்பதை அஜித் ரசிகர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
அஜித் ரசிகர்களின் இந்த நேர்மைக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.