முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! ஜகதீப் தன்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு! தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பெரியார் அறிவுலக ஊழல்! ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம் காட்டம்!நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அதிரடி: கொல்கத்தாவுக்கு 199 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.

ஷுப்மன் கில், சாய் சுதர்சன் - படம் | ஐபிஎல்

Updated On :

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடியது.

சாய் சுதர்சன், ஷுப்மன் கில் அதிரடி

முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். 114 ரன்களுக்கு குஜராத் அணி அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன் பின், கேப்டன் ஷுப்மன் கில்லுடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே பட்லரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய பட்லர் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.