2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அறிமுக வீரராக களமிறங்கும் ஆப்கன் ஆல்ரவுண்டர்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
- படம் |குஜராத் டைட்டன்ஸ் (எக்ஸ்)
Updated On :28 ஏப்ரல் 2025, 1:45 pm

DIN

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் யுத்விர் சிங் இருவரும் பிளேயிங் லெவனில் இணைந்துள்ளனர். ஃபஸல்ஹக் ஃபரூக்கி மற்றும் துஷார் தேஷ்பாண்டே பிளேயிங் லெவனில் இல்லை.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான கரிம் ஜனத் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.