நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

மும்பை இந்தியன்ஸ் வரலாற்றுச் சாதனை!

மும்பை இந்தியன்ஸ் அணி படைத்த சாதனைப் பற்றி...

News image

படம்: IPL Website

Updated On :28 ஏப்ரல் 2025, 11:47 am IST

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் லக்னெள அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து 215 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய லக்னெள அணியை 161 ரன்களில் ஆல்அவுட் செய்து 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கியவுடன் சில போட்டிகளில் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

வரலாற்றுச் சாதனை

ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை 271 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 148 முறை நேரடியாகவும் இரண்டு முறை சூப்பர் ஓவரிலும் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (140) மற்றும் மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (134) உள்ளன. இதில், சென்னை அணிக்கு இரண்டு சீசன்கள் தடை விதிக்கப்பட்டு விளையாடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடித்தால், தோல்வி பெறாத அணி என்ற பெருமையையும் மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்துள்ளது.

இதுவரை முதலில் பேட்டிங் செய்து 16 முறை 200 ரன்களுக்கு மேல் மும்பை இந்தியன்ஸ் அணி அடித்துள்ளது, அனைத்து போட்டிகளிலும் எதிரணியை வீழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.