ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சுனில் நரைன்
சுனில் நரைன்படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சுனில் நரைன் புதிய சாதனை

பெங்களூருவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

நேற்றையப் போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்கள் விளாசி சுனில் நரைன் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை 178 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் நரைன் 100 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

280 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும், 275 சிக்ஸர்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com