ஷர்துல் தாக்குர்
ஷர்துல் தாக்குர்படம்: ஏபி

பந்துவீச்சாளர்களுக்கு அநீதி..! ஷர்துல் தாக்குர் ஆவேசம்!

லக்னௌ அணியின் ஆட்ட நாயகன் ஷர்துல் தாக்குர் பேசியதாவது...
Published on

லக்னௌ அணி வேகப்பந்து வீச்சாளர் வீரர் ஷர்துல் பந்துவீச்சாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியாக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 7-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஷர்துல் தாக்குர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

விருதுபெற்ற பின்னர் 33 வயதாகும் ஷர்துல் தாக்குர் பேசியதாவது:

பந்துவீச்சாளர்களுக்கு அநீதி

இந்தமாதிரியான பிட்ச்சுகளில் பந்துவீச்சாளர்களுக்கு குறைவான அளவே உதவி கிடைக்கிறது.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டும் சமமாக அமையும்படி பிட்ச் அமைக்க வேண்டும் என கடைசி போட்டியிலும் இதைப்பற்றி கூறியிருந்தேன்.

குறிப்பாக இம்பாக்ட் பிளேயர் விதிமுறை அறிமுகமான பிறகு இது பந்துவீச்சாளர்களுக்கு நியாயமானதாக இல்லை. பேட்டிங்கில் 240-250 ரன்கள் குவிக்கிறார்கள்.

நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாவிட்டால் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட திட்டமிட்டு இருந்தேன்.

ஏலத்தில் தேர்வாகாதது வருத்தம்

ரஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும்போது ஜகீர் கானிடமிருந்து அழைப்பு வந்தது. தேவைப்பட்டால் நீங்கள் விளையாட வேண்டியிருக்கும் எனக் கூறினார்.

வாழ்க்கையில் உயர்வு, தாழ்வு ஏற்படுவது இயல்பு. ஐபிஎல் போட்டிகளில் எடுக்காதது சிறிது வருத்தமாக இருந்தது.

நிச்சயமாக பிட்ச்சில் ஸ்விங் இருந்தது. நான் எனது வாய்ப்புகளை பயன்படுத்த விரும்பினேன் என்றார்.

ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com