ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடி வருகிறது.
விக்கெட்டுகளை இழந்து திணறல்
முதலில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் யஷ் தயாள் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின், பிரப்சிம்ரன் சிங் (18 ரன்கள்), ஜோஷ் இங்லிஷ் (4 ரன்கள்), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்கள்), நேஹல் வதேரா (8 ரன்கள்), ஷஷாங் சிங் (3 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
யஷ் தயாள் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் சுயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்டாய்னிஸ், பிரப்சிம்ரன் அரைசதம் விளாசல்; ராஜஸ்தானுக்கு 223 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


