ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ
படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்களும், ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்களும் எடுத்தனர்.

ரோஹித் சர்மாவுடன் களமிறங்கியதில் மகிழ்ச்சி

குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ரோஹித் சர்மாவிடம் நான் அதிக அளவிலான விஷயங்களை கூற வேண்டியிருக்காது என நினைக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் அவர் 7000 ரன்கள் எடுத்துள்ளார் என நினைக்கிறேன். உலகில் உள்ள பல்வேறு சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவருடன் இணைந்து பேட்டிங் செய்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவருடன் இணைந்து அணிக்காக ரன்கள் குவித்தது மகிழ்ச்சியளித்தது என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (ஜூன் 1) அகமதாபாதில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரியான் ரிக்கல்டான் தாயகம் திரும்பிய நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக ஜானி பேர்ஸ்டோ அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com