
கைவிரல் முறிவு காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டான் விலகியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன் தினம் (மே 29) முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஜேமி ஓவர்டான் விலகல்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, பந்தை பிடிக்க முயற்சித்தபோது ஜேமி ஓவர்டானுக்கு கைவிரல் முறிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டிகளிலிருந்தும், டி20 தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டானுக்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரை இங்கிலாந்து மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேமி ஓவர்டானுக்குப் பதிலாக ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்று வீரர் அறிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.