அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம்: ஜஸ்பிரித் பும்ரா

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்)
ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்காக இதுவரை 45 டெஸ்ட், 89 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 143 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தொடர்ச்சியாக விளையாடுவது கடினம்

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த மாதம் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பின்போது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளயாடமாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த ஒரு வீரரும் நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக விளையாடுவது கடினம். நான் நீண்ட காலமாக தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். ஆனால், என்னுடைய உடல் எப்படி இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமான தொடர்களில் விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடலை நன்றாக புரிந்துகொண்டு, அனைத்துத் தொடர்களிலும் விளையாடாமல், முக்கியமான தொடர்களில் விளையாட வேண்டும்.

ஒரு கிரிக்கெட்டராக எந்த போட்டியையும் தவறவிடக் கூடாது என எப்போதும் நினைப்பேன். தொடர்ச்சியாக விளையாடுவது எனக்குப் பிடிக்கும். தற்போது, தொடர்ச்சியாக விளையாடுவதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், நீண்ட காலத்துக்காக என்னிடம் தற்போது எந்த ஒரு இலக்கும் இல்லை. இதுவரை என்னுடைய கிரிக்கெட் பயணம் நன்றாக அமைந்துள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவுள்ளதை கேள்விப்பட்டேன். அதனை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் யார் நினைத்திருப்பார்கள்? அதனால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது என்னுடைய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஆனால், ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக எந்த ஒரு இலக்கையும் எனக்கு நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஏனெனில், நான் எப்போதெல்லாம் இலக்குகளை உருவாக்குகிறேனோ, அப்போதெல்லாம் அதனை நிறைவேற்ற முடியாத சூழல் அமைந்து விடுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com