அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுதான் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமென ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
இந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுதான் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமென ரஷித் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஆரம்பத்தில் ரன்களைக் கொடுத்தாலும், அதன் பின் நன்றாக பந்துவீசினோம். சேஸிங்கின்போது, நல்ல தொடக்கம் கிடைத்தபோதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இதுமாதிரியான ஆடுகளத்தில் ஓவருக்கு 9-10 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம் கிடையாது. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் கிடைத்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியடைந்தோம் என்றார்.
தசைப் பிடிப்பு காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் நேற்றையப் போட்டியில் விளையாடவில்லை. அணியை ரஷித் கான் கேப்டனாக வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Rashid Khan has stated that the loss of wickets in quick succession was the reason for the defeat in the match against the Rajasthan Royals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு; ஷுப்மன் கில் விளையாடவில்லை!

சேப்பாக்கத்தில் அண்ணனும் தம்பியும்... சர்ஃபராஸ் கான், முஷீர் கான்!
வாரிசு இயக்குநர் இயக்கத்தில் சல்மான் கான்!

சித்தாரே ஜமின் பர் ஓராண்டுக்குப் பின் ஓடிடியில் ரிலீஸ்! ஆமிர் கான் விளக்கம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


