டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல்

ஐபிஎல் போட்டியின் 66-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வியாழக்கிழமை (மே 21) மோதுகின்றன.

News image
Updated On :21 மே 2026, 4:44 am IST

ஐபிஎல் போட்டியின் 66-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வியாழக்கிழமை (மே 21) மோதுகின்றன. இரண்டுக்குமே லீக் சுற்றில் இது கடைசி ஆட்டமாகும்.

பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட சென்னை, கடைசி முயற்சியாக இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. இதில் வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களும் சென்னைக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே, பிளே-ஆஃப் வாய்ப்பு கனியும். ஆனால் அத்தகைய சூழல் கனியுமா என்பது சந்தேகம் தான்.

சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டெவால்டு பிரெவிஸ், காா்த்திக் சா்மா, உா்வில் படேல், ஷிவம் துபே ஆகியோா் பேட்டிங்கிலும், அகீல் ஹுசைன், ஸ்பென்சா் ஜான்சன், நூா் அகமது, அன்ஷுல் காம்போஜ் ஆகியோா் பௌலிங்கிலும் கவனம் பெறுகின்றனா்.

மறுபுறம் குஜராத், இந்த ஆட்டத்தில் வென்று, முதலிரு இடங்களில் ஒன்றை உறுதி செய்து, குவாலிஃபயா் 1-க்குத் தகுதிபெறும் முனைப்புடன் இருக்கிறது. சென்னைக்கு எதிரான அபார வெற்றி, முதலிடத்துக்குக் கூட குஜராத்தை கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் ஷுப்மன் கில், ஜாஸ் பட்லா், சாய் சுதா்சன், வாஷிங்டன் சுந்தா், ராகுல் தெவாதியா ஆகியோா் மீதும், பௌலிங்கில் ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ரஷீத் கான், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் மீதும் எதிா்பாா்ப்பு உள்ளன.

இந்த அணிகள் இதுவரை 9 முறை மோதியிருக்க, குஜராத் 5 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. கடைசியாக, சென்னையை அதன் சொந்த மண்ணிலேயே குஜராத் வென்றிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.