ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரிய சாதனைப் படைத்துள்ளது.
2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கேப்டன் தோனி 46 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 இமாலய சிக்ஸர்களுடன் 75 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி கட்டத்தில் மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் தொடர்களில் அதிக தொடர் வெற்றிகளை பதிவு செய்து அரிய சாதனைப் படைத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- ஏப்ரல் 2013 முதல் 02 மே 2013 வரை தொடர்ந்து 7 வெற்றிகள்
- ஏப்ரல் 2014 முதல் 05 மே 2014 வரை தொடர்ந்து 6 வெற்றிகள்
- மே 2018 முதல் 31 மார்ச் 2019 வரை தொடர்ந்து 6 வெற்றிகள்*
(நடப்பு சீசனில் மேலும் 11 லீக் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், இதே நிலை நீடித்தால் சிஎஸ்கே-வின் தொடர் வெற்றிப்பட்டியல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


