Enable Javscript for better performance
ஒரு அணிக்கு எதிரான தொடர் வெற்றி: 2-ஆம் முறையாக இடம்பிடித்த சிஎஸ்கே!- Dinamani

சுடச்சுட

    

    ஒரு அணிக்கு எதிரான தொடர் வெற்றி: 2-ஆம் முறையாக இடம்பிடித்த சிஎஸ்கே!

    By Raghavendran  |   Published on : 24th March 2019 11:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    csk_fans

     

    2019-ஆம் ஆண்டு நடைபெறும் 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் சனிக்கிழமை (ஏப்.23) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 70 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து ஆடிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

    இந்நிலையில், ஒரு அணிக்கு எதிராக அதிக போட்டிகளில் தொடர் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனைப் படைத்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் 2-ஆம் முறையாக சிஎஸ்கே இடம்பிடித்துள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:

    (2015-18)* - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 8 முறை வென்றுள்ளது

    (2011-15) - தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 8 முறை வென்றுள்ளது

    (2014-17) - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 8 முறை வென்றுள்ளது

    (2012-15) - தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 7 முறை வென்றுள்ளது

    (2013-2018) - தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 7 முறை வென்றுள்ளது

    (2014-19)* - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 7 முறை வென்றுள்ளது

    (* நடப்பு தொடர் உட்பட)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai