ஷார்ஜாவில் மீண்டும் '200': மும்பை 208 ரன்கள் குவிப்பு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.
ஷார்ஜாவில் மீண்டும் '200': மும்பை 208 ரன்கள் குவிப்பு


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 17-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த ஆட்டமும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய ரோஹித், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

 அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் துரிதமாக ரன் சேர்க்க, ஃபார்ம் இல்லாமல் திணறி வந்த டி காக் அதிரடிக்கு மாற நேரம் எடுத்துக்கொண்டார்.

ஆனால், சூர்யகுமார் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டி காக் துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார்.

இஷான் கிஷன் மற்றும் டி காக் விக்கெட்டைப் பாதுகாத்து பாட்னர்ஷிப் அமைத்தனர். இடையில் ரன் ரேட் சற்று குறைந்ததையடுத்து, வில்லியம்ஸன் ஓவரில் டி காக் மற்றும் கிஷன் தலா 1 சிக்ஸர் அடிக்க மீண்டும் ரன் ரேட் உயரத் தொடங்கியது. இதனிடையே டி காக்கும் தனது 32-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார்.

ரன் ரேட் ஓவருக்கு 10 ரன்களைத் தொடவிருந்த நிலையில் ரஷித் கான் சுழலில் டி காக் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே கிஷனும் 31 ரன்களுக்கு மணீஷ் பாண்டேவின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

கடைசி 5 ஓவர்களுக்கு ஹார்திக் பாண்டியா மற்றும் கைரன் போலார்ட் களத்தில் இருந்தனர். ரஷித் கான் ஓவர் என்பதால் 16-வது ஓவரில் மட்டும் ரன் குவிக்காமல் தடுப்பாட்டாம் ஆடினர். நட்ராஜன் ஓவரில் பாண்டியா முதல் பந்தில் சிக்ஸர் அடித்தாலும், அடுத்தடுத்த பந்துகளை அவர் சரியாக வீச அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

சந்தீப் சர்மா வீசிய 18-வது ஓவரில் போலார்ட் 2 சிக்ஸர்கள் அடிக்க 15 ரன்கள் கிடைத்தன. 19-வது ஓவரை மீண்டும் நட்ராஜன் வீசினார். அந்த ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி மட்டுமே அடிக்க மும்பைக்கு 13 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

கடைசி ஓவரில் சித்தார்த் கௌல் வீச சிறப்பான யார்க்கர் பந்தால் பாண்டியா 2-வது பந்தில் போல்டானார். அவர் 19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய க்ருணால் பாண்டியா 4 பந்துகளையும் 2 சிக்ஸர், 2 பவுண்டரிக்கு விரட்ட மும்பை அணி 200 ரன்களைக் கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. க்ருணால் பாண்டியா 4 பந்துகளில் 20 ரன்களுடனும், போலார்ட் 13 பந்துகளில் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹைதராபாத் தரப்பில் சித்தார்த் கௌல் மற்றும் சந்தீப் சர்மா தலா 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com