ஆர்ச்சர் அசுர வேகம்: 161 ரன்களுக்குக் கட்டுப்பட்டது தில்லி

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
ஆர்ச்சர் அசுர வேகம்: 161 ரன்களுக்குக் கட்டுப்பட்டது தில்லி


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் பந்திலேயே தில்லிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ள பிரித்வி ஷா முதல் பந்திலேயே ஆர்ச்சர் வேகத்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய அஜின்க்யா ரஹானே வெறும் 2 ரன்களுக்கு ஆர்ச்சர் வேகத்தில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 12 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, ஷிகர் தவான் அதிரடி காட்ட, ஷ்ரேயஸ் ஒத்துழைப்பு தந்து விளையாடினார். இதனால், பவர் பிளே முடிவில் தில்லி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது.

ஷ்ரேயஸ் விக்கெட்டைப் பாதுகாக்க அதிரடி காட்டி வந்த தவான் 30-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

அரைசதம் அடித்த அவர் சிறிது நேரத்திலேயே ஷ்ரேயஸ் கோபால் பந்தில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதுவரை நிதானம் காட்டி வந்த ஷ்ரேயஸ், தவான் விக்கெட்டுக்குப் பிறகு அதிரடி காட்டத் தொடங்கினார். உனத்கட் ஓவரில் 2 சிக்ஸர் அடித்த அவர் 40-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

ஆனால், அடுத்த ஓவரிலேயே கார்த்திக் தியாகி பந்தில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் 43 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து ராஜஸ்தானின் சிறப்பாக யார்க்கர் பந்துவீச்சால் தில்லி பேட்ஸ்மேன்களால் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட முடியவில்லை. இதனால், 19-வது ஓவரில் ஸ்டாய்னிஸ் ஆர்ச்சர் பந்திலும், 20-வது ஓவரில் கேரி உனத்கட் பந்திலும் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. 

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், உனத்கட் 2 விக்கெட்டுகளையும், ஷ்ரேயஸ் கோபால் மற்றும் கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com