கார்த்திக், மார்கன் அதிரடி பினிஷிங்: ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் இலக்கு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.
போல்டானா ராகுல் திரிபாதி
போல்டானா ராகுல் திரிபாதி


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபில் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர். முதல் 3 ஓவர்களில் நிதானம் காட்டினாலும், அடுத்த 3 ஓவர்களில் அதிரடி காட்டினர். இதனால், பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி 48 ரன்கள் எடுத்தது. அதேசமயம், பவர் பிளேவின் கடைசி பந்தில் திரிபாதி 23 ரன்களுக்கு நட்ராஜ் வேகத்தில் போல்டானார்.

இதன்பிறகு, கில்லுடன் இணைந்த நிதிஷ் ராணா பாட்னர்ஷிப் அமைத்தார். பெரிதளவில் பவுண்டரிகள் போகாததால், ரன் ரேட் ஓவருக்கு 8-க்கு கீழ் இருந்து வந்தது. இந்த பாட்னர்ஷிப் அதிரடி பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய நேரத்தில் ஷுப்மன் கில் 36 ரன்களுக்கு (37 பந்துகள்) ரஷித் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ராணாவும் 29 ரன்கள் (20 பந்துகள்) விஜய் சங்கர் பந்தில் ஆட்டமிழந்தார்.

களத்தில் புதிய பேட்ஸ்மேன்களாக ஆண்ட்ரே ரஸல் மற்றும் கேப்டன் இயான் மார்கன் இருந்தனர். இந்த முறையும் ஜொலிக்கத் தவறிய ரஸல் 11 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து நட்ராஜன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, தினேஷ் கார்த்திக் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார். மார்கனும் கடைசி ஓவரில் அதிரடி காட்டி அசத்தினார். ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் ஆட்டமிழந்தார். மார்கன் 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்த்திக் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

ஹைதராபாத் தரப்பில் நட்ராஜன் 2 விக்கெட்டுகளும், விஜய் சங்கர், பேசில் தம்பி மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com