டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தோல்வியடைந்துள்ளார்.
தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இளம் வீராங்கனை சோனம் மாலிக், மகளிர் மல்யுத்தப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் மங்கோலியாவைச் சேர்ந்த போலோர்டுயாவுடன் மோதினார். போட்டி முடிவதற்கு அரை நிமிடம் இருக்கும் வரை 2-0 என முன்னிலையில் இருந்தார் சோனம் மாலிக். எனினும் கடைசியில் இரு புள்ளிகளை எடுத்தார் போலோர்டுயா. போட்டி 2-2 என சமனில் முடிந்தாலும் ஒரே சமயத்தில் இரு புள்ளிகளையும் பெற்றதால் மங்கோலிய வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மங்கோலிய வீராங்கனை இறுதிச்சுற்றுக்குள் நுழைந்திருந்தால் சோனம் மாலிக்குக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அவர் தோற்றதால் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார் சோனம் மாலிக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


