திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒலிம்பிக்ஸ்: ஹரியாணா ஹாக்கி வீராங்கனைகளுக்குப் பரிசுத்தொகை அறிவித்த முதல்வர்

கேப்டன் ராணி ராம்பால், நவ்ஜோத் கெளர், சவிதா புனியா, நேஹா கோயல், மோனிகா மாலிக், நவ்னீத் கெளர், நிஷா, ஷர்மிளா தேவி, உதிதா ஆகிய

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 9:28 am

DIN

ஒலிம்பிக்ஸில் சாதித்த ஹரியாணா ஹாக்கி வீராங்கனைகளுக்குப் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை 4-3 என வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. மகளிர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்தது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியிருந்த இந்திய மகளிர் அணி, அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று சந்தித்தது. 

ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு இந்திய மகளிர் அணி சுறுசுறுப்பாக விளையாடி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து முன்னணி பெற்றது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. ரியோ ஒலிம்பிக்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, மீண்டும் 2 கோல்களை அடித்து 4-3 என ஆட்டத்தை வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. 

இந்திய மகளிர் ஹாக்கி அணியில் கேப்டன் ராணி ராம்பால், நவ்ஜோத் கெளர், சவிதா புனியா, நேஹா கோயல், மோனிகா மாலிக், நவ்னீத் கெளர், நிஷா, ஷர்மிளா தேவி, உதிதா ஆகிய 9 ஹரியாணா வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களின் சாதனைக்கு ஊக்கமளிக்கும் விதமாக 9 பேருக்கும் தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.