47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அடுத்த ஒலிம்பிக்ஸ் எங்கு, எப்போது நடைபெறுகிறது?

டோக்கியோவில் நிறைவு நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில்...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 6:25 am

DIN

ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்த 32-ஆவது ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா (113) முதலிடத்தையும், சீனா (88) 2-ஆம் இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய ஜப்பான் 58 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது. இந்தியா 7 பதக்கங்களுடன் 48-ஆம் இடம் பிடித்தது. இந்த ஒலிம்பிக் போட்டியிலும் வழக்கம்போல பல்வேறு பிரிவுகளில் முந்தைய உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு, பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி 17 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டி, அணிவகுப்பு, கண்கவா் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கைகளுக்குப் பிறகு முடித்து வைக்கப்பட்டது. நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பில், இந்திய அணியை மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா தேசியக் கொடியேந்தி வழிநடத்திச் சென்றாா்.

அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியின்போது, டோக்கியோ நகர மேயா் யுரிகோ கொய்கோ ஒலிம்பிக் கொடியை சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாக்கிடம் ஒப்படைக்க, அதை அவா் பாரீஸ் நகர மேயா் ஆனி ஹிடால்கோவிடம் ஒப்படைத்தாா்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, இம்முறை நிறைவு நிகழ்ச்சியின்போது அடுத்த ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள பிரான்ஸின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதோடு, போட்டி நடைபெறவுள்ள பாரீஸ் நகரம் குறித்த குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது. அதேபோல், முதல் முறையாக டோக்கியோவில் நிறைவு நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில், பாரீஸ் நகரிலும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, 2024-ம் வருடம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளன. இதற்கு முன்பு இருமுறை (1900, 1924) பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.  அதாவது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியை பாரிஸ் மீண்டும் நடத்தவுள்ளது. இதையடுத்து 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.