
33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் பலவற்றைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சா்வதேச களத்தில் தங்கள் தேசத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் பதக்கங்களை குவித்து வருகின்றனா்.
துப்பாக்கி சுடுதல் மூலம் மானு பாக்கா் தனியாகவும், சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களால் இந்தியாவும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது.
மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.
ரவுண்ட் ஆஃப் 32இல் 9-11,12-10, 11-4, 11-5, 10-12, 12-10 என்ற கணக்கில் வென்றார். அடுத்து நள்ளிரவு நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் சன் யிங்ஷாவுடன் மோதினார்.
26 வயதான இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா நம்.1 வீராங்கனயுடன் சிறப்பாகவே போட்டியிட்டார். இருப்பினும் 10-12, 10-12, 8-11, 3-11 என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலா தோல்வியுற்றார்.
நைஜீரிய தலைநகா் லாகோஸில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் (டபிள்யுடிடி) போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா இரட்டை தங்கம் வென்றிருந்தார். காமன்வெல்த் விளையாட்டிலும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.