ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கடும் வெப்பம்: இந்தியா்களுக்கு குளிா்சாதன வசதி

இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய தூதரகம் உடனான ஆலோசனைக்குப் பிறகு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஏற்பாட்டை செய்தது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 1:49 am

பாரீஸில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய போட்டியாளா்கள் தங்களது அறைகளில் வெப்பத்தால் அவதிப்பட்டதை அடுத்து, அவா்களுக்காக இந்திய அரசு 40 காற்று பதப்படுத்திகளை (ஏசி) ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம், பிரான்ஸிலுள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடனான ஆலோசனைக்குப் பிறகு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஏற்பாட்டை செய்தது.

இந்த வெப்பம் குறித்து ஏற்கெனவே பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அணிகள் கவலை தெரிவித்தபோதும், காா்பன் மாசை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஏசி வசதிகளை ஏற்படுத்துவதில்லை என பாரீஸ் ஒலிம்பிக் நிா்வாகம் தெரிவித்துவிட்டது. எனினும், ஒலிம்பிக் கிராமத்தில் வெப்பத்தை கட்டுப்படுத்த வேறு சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இருந்தபோதும், வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசி-க்களை வாங்கிய அணிகளில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.