பராகுவே நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்ஸா
பராகுவே நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்ஸாபடங்கள்: இன்ஸ்டா/ லுவானா அலோன்ஸா

20 வயதில் ஓய்வை அறிவித்த பராகுவே நீச்சல் வீராங்கனை!

பராகுவே நாட்டைச் சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்ஸா ஓய்வை அறிவித்துள்ளார்.
Published on

பாரீஸ் ஒலிம்பிக்கில் அழகாக இருப்பதால் பிரச்னையை சந்தித்தவர் என்று ஊடகங்களில் பிரபலமானவர் பராகுவே நாட்டை சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்ஸா.

ஒலிம்பிக் கிராமத்தில் இவரது செயல்பாடுகள் மற்றவர்களை பாதித்ததாக கூறப்படுகிறது. அழகாக இருப்பதால் மற்றவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதால் ஒலிம்பிக் கிராமத்தை விட்டே வெளியேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

லுவானா அலோன்ஸாவின் மறுப்பு பதிவு.
லுவானா அலோன்ஸாவின் மறுப்பு பதிவு.படம்: ஆங்கில ஊடகம்.

ஆனால் இதை மறுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த லுவானா அலோன்ஸா, “அப்படி எதுவும் நடைபெறவில்லை. வதந்திகளை பரப்பாதீர்கள்” எனக் கூறியிருந்தார்.

பராகுவே நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்ஸா
காலிறுதியில் தோல்வியுற்றார் ரீதிகா ஹூடா! வெண்கலம் வாய்ப்பிருக்கிறது!

தவறான நடத்தை விதிமீறல்களால் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சில ஆங்கில ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகளீர் 100மீ. பட்டர்பிளை நீச்சல் போட்டியில் 0.24 நொடிகளில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளார் லுவானா அலோன்ஸா.

2020 ஒலிம்பிக்கில் 17 வயதில் பங்கேற்ற லுவானா அலோன்ஸா 28ஆவது இடம் பிடித்து வெளியேறினார். தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கில் 6ஆம் இடம் பிடித்து வெளியேறினார்.

பராகுவே நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்ஸா
அவதார் 3: படத்தலைப்பு, ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பராகுவே நாட்டில் 2004ஆம் ஆண்டு பிறந்த லுவானா அலோன்ஸா அந்நாட்டின் 100மீ பட்டர்பிளை நீச்சலில் தேசிய சாதனை தன் வசம் வைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, “இதுதான் என்னுடைய கடைசி போட்டி. நீச்சல் போட்டியிலிருந்து ஒய்வு பெறுகிறேன்” என்று அதிர்ச்சியளித்தார்.

ஒரே வாரத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கினை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 500ஆயிரத்தில் இருந்து 1 மில்லியன் (10 லட்சம்) ஆக உயர்ந்துள்ளது குறித்து வேடிக்கையாக பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com