லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அவதார் 3: படத்தலைப்பு, ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அவதார் 3 திரைப்படத்தின் படத்தலைப்பு, ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அவதார் 3 - படம்: எக்ஸ்

Published On :10 ஆகஸ்ட் 2024, 4:00 pm IST

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். 

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது. 

இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.15,000 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவதார் 3 படத்தின் பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபயர் அண்ட் ஆஷ் ( நெருப்பும் சாம்பலும்) எனப் பெயரிட்டுள்ளார்கள். டி23 எக்ஸ்போ நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜேம்ஸ் கேமரூன் இதை தெரிவித்துள்ளார்.

”இதுவரை பார்க்காத பண்டோரா (துணைக்கோள்) இதில் பார்க்கலாம். இதுவரை இல்லாத அளவுக்கு உங்களை உணர்ச்சிகளால் கட்டிப்போடும், கண்களுக்கு விருந்தாக அமையும்” என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இந்தப்படம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாகுமெனவும் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.