12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

படம் நன்றாக இல்லையென்றால்...: செருப்பை காண்பித்து புரமோஷன் செய்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் ஹாட் ஸ்பாட் 2 படத்தை தயாரிக்கிறார்.

செருப்பை காண்பித்து புரமோஷன் செய்த விஷ்ணு விஷால்

Published On :

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தினை இயக்கியவர் விக்னேஷ் கார்த்திக். திட்டம் இரண்டு படத்துக்குப் பிறகு அடியே படத்தினை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் விக்னேஷ் கார்த்திக் ஹாட் ஸ்பாட் படத்தை இயக்கினார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஹாட் ஸ்பாட் படத்தை கே .ஜே. பி. டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது. சிக்ஸர் என்டெர்டைன்மெண்ட் சார்பில் தினேஷ் இப்படத்தை வெளியிட்டார்.


இப்படத்தில் கலையரசன், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாட் ஸ்பாட் திரைப்படம் டெண்ட்கொட்டா (tentkotta) ஓடிடி தளத்தில் கடந்த மே.17 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் இதன் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாட்ஸ்பாட் படத்தின் வெளியீட்டின்போது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “படம் புடிக்கவில்லை என்றால் செருப்பால்கூட அடியுங்கள்” எனப் பேசியிருப்பார். அதற்காக செருப்பைக்கொடுத்து அதனை நினைவுபடுத்துவதாக செய்திருப்பார் விஷ்ணு விஷால்.

இந்த விடியோவில், “படம் நன்றாக இல்லையென்றால் செருப்பால் அடிப்பார்கள். நான் இல்லை. மக்கள். பார்ட்2 பரிதாபங்கள் தெரியுமில்லையா. அதனால் கவனமாக எடுங்கள்” என இயக்குநரிடம் பேசுவார். இந்த விடியோ கவனம் ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.