12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆணவக் கொலை வன்முறை அல்ல... அக்கறைதான்: நடிகர் ரஞ்சித்

நடிகர் ரஞ்சித் ஆணவக்கொலை வன்முறை அல்ல எனப் பேசியது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

நடிகர் ரஞ்சித்

Published On :

நடிகர் ரஞ்சித் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய கவனம் பெற்றார்.

சில ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியிருந்தவர், தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக வலம் வந்தார். தற்போது, கவுண்டம்பாளையம் என்கிற படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.

கவுண்டபாளையம் படத்தின் புரோமோஷனுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதிவெறியன் என்றால், ஆம் நான் சாதிவெறியன்தான்” எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

தற்போது மீண்டும் சர்ச்சைக்குரியவகையில் பேசியுள்ளார். நேற்றிரவு சேலத்தில் ரஞ்சித் பேசியதாவது:

ஆணவக்கொலை என்பது உணர்ச்சிதான். நான் என்னுடைய படத்திலும் இதற்கு தீர்வு சொல்லியிருக்கிறேன். நேரடியாக ஒரு காதல் நடக்கும்போது பெற்றோர்கள்தான் பாதிக்கிறார்கள். அவர்களுக்குதான் அதன் வலி தெரியும்.

உங்களுடைய பைக்கையோ அல்லது செல்ஃபோனையோ யாராவது ஒருவர் திருடிவிட்டால் உடனே சென்று அடிப்பதில்லையா அதுமாதிரிதான் இதுவும். தன் வாழ்க்கை, சுவாசம் அனைத்தும் தான் பெற்ற பிள்ளையாக நினைக்கும் பெற்றோர்களுடைய கோபம் ஒரு அக்கறையினால் வருவதுதான். ஆணவப்படுகொலை ஒரு வன்முறையோ கலவரமோ அல்ல. எது நடந்தாலும் அது அக்கறையின் காரணமாக நடப்பவைதான் எனப் பேசியுள்ளார்.

இந்தப் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.