நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி கட்டா குஸ்தி - 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது.
இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், காளி வெங்கட், மோக்ஷா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்களின் காட்சிகளும் பெரிதாக ரசிக்கப்பட்டன.
ஆண் - பெண் உறவு, திருமண உறவுகளில் இருக்க வேண்டிய நம்பிக்கை, அவரவருக்கான கனவுகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட கருத்துகளுடன் நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இப்படம் உலகளவில் ரூ. 55 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் பல படங்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
The fun filled entertainment, now on your home screens â¤ï¸#GattaKusthi2 - Streaming now on @Netflix_INSouth.
— Vishnu Vishal Studioz (@VVStudioz) July 31, 2026
Produced by @VelsFilmIntl & @VVStudioz.
A film by @ChellaAyyavu.
A @RSeanRoldan musical.@IshariKGanesh @TheVishnuVishal #AishwaryaLekshmi @kushmithaganesh⦠pic.twitter.com/IdkagEHWQ4
Summary
Vishnu Vishal's Gatta Kusthi 2 has been released on OTT!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெகா பிளாக்பஸ்டர்... கட்டா குஸ்தி - 2 வசூல் அறிவிப்பு!
ரூ. 50 கோடி வசூலைக் கடந்த கட்டா குஸ்தி - 2!

விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமான கட்டா குஸ்தி - 2!

700-க்கும் மேற்பட்ட திரைகளில் கட்டா குஸ்தி - 2!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament




