நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா தனது சென்னை லவ் ஸ்டோரி திரைப்படத்தின் வெற்றி விழாவில், “ரசிகர்கள் பித்துப்பிடித்துக் கொண்டாடுகிறார்கள்” எனப் பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் ’மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். தற்போது, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் சென்னை லவ் ஸ்டோரி என்ற படத்தில் ஸ்ரீ கௌரி ப்ரியா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரம் நடித்துள்ளார்.
இந்தப் படம் ஜூலை 24ல் உலகம் முழுவதும் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படம் இதுவரை ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் வெற்றி விழாவில் நடிகை கௌரி ப்ரியா பேசியதாவது:
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்பது இந்த நேரத்தில் மிகவும் சிறிய வார்த்தை. ஏனெனில், இந்தப் படத்துடன் ஒன்றரை ஆண்டுகளாக எனது பயணம் தொடர்ந்து வருகிறது. அதில், உணர்ச்சிகள் மிகவும் ரோலர்கோஸ்டராக இருந்து வந்துள்ளது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.
எனது சினிமா வாழ்க்கையில் இவ்வளவு விரைவாக ஒரு அற்புதமான கதாபாத்திரம், ஆழம், பலம்வாய்ந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
உண்மையில் நாங்கள் ஒரு நல்ல படத்தை, காதல் கதையை எடுக்கிறோம், அது அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், படம் வெளியான பிறகு என்ன ஆனது என்று எனக்குப் புரியவில்லை; இந்தப் படத்துக்காகவும் எனது நடிப்பிற்காகவும் கிடைக்கும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த அளவுக்கு தன்னிச்சையாக ஒரு படத்துக்கு ஆதரவு கிடைக்கும்போது தனிப்பட முறையிலும் கலை ரீதியாகவும் மிகுந்த தன்னிறைவை அளிக்கிறது. புக்மை ஷோவில் உங்களின் அன்பைப் பார்க்கிறேன். உண்மையில் நான் திருட்டுத்தனமாக திங்கள் கிழமை நள்ளிரவு 9.30 மணிக்கு படத்துக்குச் சென்றேன். காலையில் இந்தச் சந்திப்பு இருந்தும் யாரிடமும் சொல்லாமல் படத்துக்குச் சென்றேன். ஹவுஸ் ஃபுல்லாக இருந்த அந்த நாளில் மக்கள் அனைவரும் பித்துப் பிடித்ததுபோல கொண்டாடுகிறார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
உண்மையில் அதிகம் பேசக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் நமது படம் பேசுகிறது; படத்துக்குப் பின்னால் நீங்கள் பேசுகிறீர்கள். அதனால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி. உங்கள் அனைவருக்கும் வணக்கத்தை விட மற்றொன்று அளிக்க விரும்புகிறேன். (கையில் இதய எமோஜியை உருவாக்கி ரசிகர்களுக்கு காட்டுகிறார்). நன்றி எனக் கூறினார்.
Overwhelmed with happiness! â¤ï¸
— Mass Movie Makers (@MassMovieMakers) July 30, 2026
The immense love for my character and the HOUSEFULL boards across theatres make this moment truly unforgettable. Thank you for making #ChennaiLoveStory so specialâ¨- Heroine @srigouripriya
Book your tickets nowðï¸ https://t.co/Nr20A68t7T pic.twitter.com/IwLmogcK4a
Summary
Audience enjoy the film so crazily made me feel extremely happy says chennai love story actress sri Gouri Priya
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம்பெண் தற்கொலை

மிகுந்த வரவேற்பில் கௌரி ப்ரியாவின் சென்னை லவ் ஸ்டோரி..! வசூலிலும் அசத்தல்!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய ஸ்ரீ கௌரி ப்ரியா!

ஹார்ட் பீட் தொடரில் இணையும் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament




