நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடிகர்கள் கருணாஸ், காளி வெங்கட், மோக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். அவர்களின் காட்சிகளும் பெரிதாக ரசிக்கப்பட்டன.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 55 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் முதல்முறையாக 50 கோடி வசூலை எட்டியுள்ளார். மேலும், வசூல் போஸ்டரில் மெகா ஃபேமிலி பிளாக்பஸ்டர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
The box office collection for actor Vishnu Vishal's Gatta Kusthi 2 has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










