நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த கட்டா குஸ்தி - 2 திரைப்படம் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டு வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த கட்டா குஸ்தி - 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியான வெற்றிப்படமாக மாறியுள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 40 கோடி வரை இப்படம் வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் வாரத்திலும் நிறைய திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுடன் 700க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதால் விஷ்ணு விஷாலின் பெரிய வெற்றிப்படமாக இது மாறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The film Gatta Kusthi 2, starring actor Vishnu Vishal, is being screened on additional screens.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









