நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
கட்டா குஸ்தி - 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் செல்ல அய்யாவு ஆண் - பெண் உறவுச் சிக்கலுடன் பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும் என்பதை மையப்படுத்திய குஸ்தியாக கதையாக உருவாக்கியிருந்தார்.
முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் கமர்சியல் அம்சங்களுடன் கூடிய திரைப்படமாகத் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முக்கியமாக, நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் மோக்ஷாவின் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஐஷ்வர்யா லட்சுமி நாயகியாகவும், முனீஸ்காந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கட்டா குஸ்தி திரைப்படம் 5 நாள் வசூலாக ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளது. முதல் பாகத்தின் வசூலைவிட இரண்டாம் பாகம் மிக அதிகமாக வசூலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Details regarding the OTT release of the film Gatta Kusthi 2, starring actor Vishnu Vishal, have been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 50 கோடி வசூலைக் கடந்த கட்டா குஸ்தி - 2!

விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமான கட்டா குஸ்தி - 2!

700-க்கும் மேற்பட்ட திரைகளில் கட்டா குஸ்தி - 2!

நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி - 2 டிரைலர்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


