நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் செல்ல அய்யாவு ஆண் - பெண் உறவுச் சிக்கலுடன் பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும் என்பதை மையப்படுத்திய குஸ்தியாக கதையாக உருவாக்கியிருந்தார்.
முதல் பாகத்தைப் போலவே கமர்சியல் அம்சங்களுடன் கூடிய திரைப்படமாகத் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முக்கியமாக, நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் மோக்ஷாவின் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருவதால் படக்குழுவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதனால், இரண்டாம் பாகமும் வணிக ரீதியான வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்டா குஸ்தி - 2 மூன்று நாள் வசூலாக ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தின் வசூலைவிட இரண்டாம் பாகம் மிக அதிகமாக வசூலிக்கும் என்றே தெரிகிறது.
Details regarding the three-day box office collection of the film Gatta Kusthi 2, starring actor Vishnu Vishal, have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









