தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மோடி மிஸ்ஸிங்! எடிட் செய்த படத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பிரதமரால் சர்ச்சை!

உலகத் தலைவர்கள் குழுப் படத்திலிருந்து மோடியை கத்திரிப்பு செய்து பாகிஸ்தான் பிரதமர் பகிர்ந்தது பற்றி...

modi

முழுப் படமும், எடிட் செய்த படமும் - x

Published On :2 செப்டம்பர் 2026, 12:58 pm IST

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் எடுத்துக் கொண்ட குழுப் படத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை கத்தரித்து, எடிட் செய்த படத்தை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளது.

கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கெக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் அனைத்து நாடுகளின் அதிபர்களும், பிரதமர்களும் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படம் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் அலுவலக எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடியை கத்தரித்து, எடிட் செய்த புகைப்படம் பதிவிடப்பட்டது சர்ச்சையானது.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் பகிர்ந்த புகைப்படம்.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் பகிர்ந்த புகைப்படம்.

உலகத் தலைவர்களுக்கு மத்தியில் ஷாபாஸ் ஷெரீஃப் நிற்கும் வகையில் குழுப் படத்தை கத்தரித்து, அந்த படத்திலிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் விமர்சித்து சமூக ஊடகங்களில் முழுப் படத்தை பகிரத் தொடங்கிய நிலையில், பின்னர் முழுப் படத்தை பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அவரது அலுவலக எக்ஸ் கணக்குகளில் பகிரப்பட்டன.

எடிட் செய்யப்படாத முழுப் படம்

எடிட் செய்யப்படாத முழுப் படம்

முன்னதாக, உச்சி மாநாட்டில் உலகத் தலைவா்களின் மத்தியில் உரையாற்றும்போது, பயங்கரவாதத்தை ஆதரித்துவரும் பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடும் வகையில், “பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது. நிதியுதவி, ஆள்சோ்ப்பு, தீவிரவாதமயமாக்கல், புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் முழுக் கட்டமைப்பும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

Summary

Modi Missing! Controversy as Pakistan PM Shares Edited Photo!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.