ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கெளதம் கம்பீர் அணியில் இடம்பெறாதது ஏன்?: தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம்!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கம்பீர் இடம்பெறாதது ஏன் என தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்...

News image
Updated On :28 ஏப்ரல் 2018, 12:07 pm

எழில்

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கம்பீர் இடம்பெறாதது ஏன் என தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தில்லி அணி தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா அணியில் இருந்து தில்லி அணியில் இடம் பெற்ற கம்பீர் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தில்லி அணியின் தொடர் தோல்வியால் பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. தோல்விக்கு பொறுப்பேற்று தான் விலகுவதற்காக கம்பீர் புதன்கிழமை அறிவித்தார். இதற்கு எந்தவித நிர்ப்பந்தமும் இல்லை என்றார். பதவி விலகியதோடு, தனக்கான ரூ.2.8 கோடி ஊதியத்தையும் கம்பீர் விட்டுத் தர முன்வந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஆட்டத்திறன் சிறப்பாக இல்லாமையால் ஊதியத்தை வீரர் ஒருவர் விட்டுத்தருவது இதுவே முதன்முறையாகும். 6 ஆட்டங்களில் கம்பீர் மொத்தம் 85 ரன்களே எடுத்திருந்தார். கம்பீர் பதவி விலகலைத் தொடர்ந்து இளம் வீரர் ஷ்ரேயஸ் ஐயரை அணியின் கேப்டனாக டேர் டெவில்ஸ் நிர்வாகம் அறிவித்தது.

கொல்கத்தாவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் தனது தொடர் தோல்விக்கு தில்லி அணி நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தில்லி டேர் டேவில்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 26-வது ஆட்டம் தில்லியில் நேற்று நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. தில்லி அணியின புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 93 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தில்லி அணி 219 ரன்களை குவித்திருந்தது. கொல்கத்தா தரப்பில் சாவ்லா, சிவம் மவி, ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். வெற்றி இலக்காக 220 ரன்களை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தில்லி தரப்பில் பெளல்ட், மேக்ஸ்வெல், அவேஷ் கான், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கம்பீர் இடம்பெறாததற்கு தில்லி அணியின் புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

கம்பீரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று நான் முடிவெடுக்கவில்லை. இந்த ஆட்டத்தில் விளையாடக்கூடாது என்கிற முடிவை அவர்தான் எடுத்தார். இது மிகவும் தைரியமான முடிவு. கம்பீர் மீது நான் வைத்துள்ள மரியாதை இதற்குப் பிறகு இன்னும் உயர்ந்துவிட்டது. இதற்கு முன்பு கேப்டனாக இருந்தாலும் சரியாக விளையாடாத நிலையில் அணியில் இடம்பெறக்கூடாது என்கிற முடிவை அவர் எடுத்துள்ளார். அவருக்குப் பதிலாகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய மன்ரோ எங்களுக்குத் தேவையான தொடக்கத்தை அளித்தார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.