ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிக்ஸர் மழை: ஸ்ரேயஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தின் விடியோ!

தில்லி அணியின புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 93 ரன்களை குவித்து...

News image
Updated On :28 ஏப்ரல் 2018, 5:30 am

எழில்

கொல்கத்தாவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் தனது தொடர் தோல்விக்கு தில்லி அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தில்லி டேர் டேவில்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 26-வது ஆட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது.

தில்லி அணியின புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 93 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தில்லி அணி 219 ரன்களை குவித்திருந்தது. கொல்கத்தா தரப்பில் சாவ்லா, சிவம் மவி, ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

வெற்றி இலக்காக 220 ரன்களை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தில்லி தரப்பில் பெளல்ட், மேக்ஸ்வெல், அவேஷ் கான், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த தில்லி இந்த வெற்றி மூலம் 7-வது இடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா 4-வது இடத்திலேயே நீடித்து வருகிறது.

தொடர் தோல்விகளால் கம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டு முதல் ஆட்டத்தில் தில்லி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. அவர் 93 ரன்களுடன் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.