ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தொடரும் அசத்தல் பந்துவீச்சு: சென்னையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறிய ஹைதராபாத்! (விடியோ)

இந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அசத்தி வருகிறார்கள்...

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:23 am

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களே எடுத்து வீழ்ந்தது. ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் ஆனார்.

இந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அசத்தி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சித்தார்த் கெளல் 8 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

கடந்த மூன்று ஆட்டங்களில் சன்ரைசர்ஸின் ஸ்கோர்கள்

118
132/6
151/7

வேறு அணிகளாக இருந்திருந்தால் மூன்று ஆட்டங்களிலும் தோற்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் பந்துவீச்சாளர்களின் அசத்தலான பங்களிப்பால் குறைவான ஸ்கோர்களாக இருந்தாலும் வெற்றிபெற்றுள்ளது ஹைதராபாத். இதனால் 8 ஆட்டங்களில் ஆறில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் சென்னை, பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகள் உள்ளன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.