ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் 3-ஆவது போட்டி நாட்டிங்கம்-இல் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றியது.
இப்போட்டியில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:
இங்கிலாந்து இன்னிங்ஸில் மொத்தம் 41 பவுண்டரிகளும், 21 சிக்ஸர்களும் விளாசப்பட்டன.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள்:
- இயன் மோர்கன் - 5418*
- இயன் பெல் - 5416
- பால் காலிங்வுட் - 5092
- ஆலெக்ஸ் ஸ்டூவர்ட் - 4677
- ஜோ ரூட் - 4552
- கெவின் பீட்டர்சன் - 4422
ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்த இங்கிலாந்து வீரர்கள்:
- 46 ஜாஸ் பட்லர் v பாகிஸ்தான், 2015
- 53 மூயின் அலி v மே.இ.தீவுகள், 2017
- 54 ஜானி பேரிஸ்டோ v ஸ்காட்லாந்து, 2018
- 58 ஜானி பேரிஸ்டோ v நியூஸிலாந்து, 2018
- 61 ஜாஸ் பட்லர் v இலங்கை, 2014
- 62 அலெக்ஸ் ஹேல்ஸ் v ஆஸ்திரேலியா, 2018*
100 சதவீதத்துக்கும் மேல் ஸ்டிரைக் ரேட்டில் அதிக சதமடித்த வீரர்கள்:
- 25 - ஏபி டி வில்லியர்ஸ்
- 10 - இஜாஸ் அகமது
- 6 - ஷாகித் அஃப்ரிடி
- 6 - ஜானி பேரிஸ்டோ
- 5 - ஜாஸ் பட்லர்
ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் இங்கிலாந்து பெற்ற மிகப்பெரிய வெற்றிகள்:
- 242 v ஆஸ்திரேலியா, டிரெண்ட் பிரிட்ஜ், 2018*
- 210 v நியூஸிலாந்து, எட்பாஸ்டன், 2015
- 202 v இந்தியா, லார்ட்ஸ், 1975
- 198 v பாகிஸ்தான், டிரெண்ட் பிரிட்ஜ், 1992
- 196 v கிழக்கு ஆப்பிரிக்கா, எட்பாஸ்டன், 1975
ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் ஆஸ்திரேலியா பெற்ற மிகப்பெரிய தோல்விகள்:
- 242 v இங்கிலாந்து, டிரெண்ட் பிரிட்ஜ், 2018*
- 206 v நியூஸிலாந்து, அடிலெய்ட், 1986
- 196 v தென் ஆப்பிரிக்கா, கேப் டௌன், 2006
- 164 v மே.இ.தீவுகள், பெர்த், 1987
- 159 v நியூஸிலாந்து, ஆக்லாந்து, 2016
ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விகள்:
- 272 ஜிம்பாப்வே v தென் ஆப்பிரிக்கா, பிணாமி, 2010
- 258 இலங்கை v தென் ஆப்பிரிக்கா, பார்ல், 2012
- 257 மே.இ.தீவுகள் v தென் ஆப்பிரிக்கா, சிட்னி, 2015
- 245 இந்தியா v இலங்கை, ஷார்ஜா, 2000
- 242 ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, டிரெண்ட் பிரிட்ஜ், 2018*
ஒருநாள் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்:
- 481-6 இங்கிலாந்து v ஆஸ்திரேலியா
- 444-3 இங்கிலாந்து v பாகிஸ்தான்
- 443-9 இலங்கை v நெதர்லாந்து
- 439-2 தென் ஆப்பிரிக்கா v மே.இ.தீவுகள்
- 438-9 தென் ஆப்பிரிக்கா v ஆஸ்திரேலியா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


