ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜடேஜா அசத்தல் பந்துவீச்சு: 127 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூர்!

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது...

News image
Updated On :5 மே 2018, 12:16 pm

எழில்

சென்னை - பெங்களுர் இடையேயான ஐபிஎல் ஆட்டம் புணேவில் இன்று தொடங்கியுள்ளது. முதல் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

காய்ச்சல் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் விளையாடாத டிவில்லியர்ஸ் இன்றைய ஆட்டத்தில் இடம்பெற்றுள்ளார். அதேசமயம் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக், ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டியிருப்பதால் தென் ஆப்பிரிக்காவுக்குப் பறந்துள்ளார்.

சென்னையில் அணியில் மூன்று மாற்றங்கள். டுபிளெஸ்ஸிஸ், கரண் சர்மா, ஆசிஃப் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக துருவ் ஷோரே, டேவிட் வில்லி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். வில்லி, ஷோரே ஆகிய இருவரும் ஐபிஎல்-லில் இந்த ஆட்டத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார்கள். அதேபோல பெங்களூர் அணியிலும் மூன்று மாற்றங்கள். டி காக், வோரா, வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், எம். அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

2-வது ஓவரில் மெக்கல்லமை 5 ரன்களில் வெளியேற்றினார் என்கிடி. எனினும் பார்தீவ் படேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்ததால் முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது பெங்களூர். இதன்பிறகு ஜடேஜா பந்துவீச வந்தார். ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை அப்போதுதான் ஏற்பட்டது.

தான் வீசிய முதல் பந்திலேயே விராட் கோலியை 8 ரன்களில் க்ளீன் போல்ட் செய்தார் ஜடேஜா. அடுத்த ஓவரில் டிவில்லியர்ஸை 1 ரன்னில் வெளியேற்றி சென்னை ரசிகர்களைக் குஷிப்படுத்தினார் ஹர்பஜன் சிங். தோனியின் அற்புதமான ஸ்டம்பிங்கினால் ஏமாற்றத்துடன் வெளியேறினார் டிவில்லியர்ஸ். இதன்பிறகு ஆட்டம் சென்னையின் கைக்கு வந்தது.

தனது மூன்றாவது ஓவரில் மன்தீப் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் சிறப்பாக விளையாடிய பார்தீவ் படேல், 37 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆனால் ஜடேஜாவின் கடைசி ஓவரில் 53 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் மிக மோசமாக விளையாடிய ஜடேஜா இந்தமுறை 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னைக்குப் பெரிய பலமாக விளங்கினார். 

எம் அஸ்வின் வந்தவேகத்தில் 1 ரன்னில் ஹர்பஜனிடம் தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் கிராண்ட்ஹோமின் விக்கெட்டை 8 ரன்களில் வீழ்த்தினார் வில்லி. இவரே அடுத்த
ஓவரில் உமேஷ் யாதவை 1 ரன்னில் ரன் அவுட்  செய்தார். இதனால் 89 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது பெங்களூர் அணி. 

கடைசிக்கட்டத்தில் டிம் செளதி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. செளதி ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார்.  சென்னை அணியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் ஹர்பஜன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.