ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது.
நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை எடுத்தது. சென்னை தரப்பில் கிடி, தாகுர், சர்மா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்து சென்னை வெற்றி பெற்றது. 8 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து வாட்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ராயுடு தலா 1 சிக்ஸர், பவுண்டரியுடன் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் சந்தீப், கார்லோஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சூதாட்ட புகார் தொடர்பாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கிய நிலையில் 2018- ஐபிஎல் சீசனில் பங்கேற்ற சென்னை 7-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஏற்கெனவே 2010, 2011-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை தற்போது மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ.20 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற ஹைதராபாத் அணிக்கு ரூ.12.5 கோடி ரொக்கப் பரிசளிக்கப்பட்டது.
ஐபிஎல் விருதுகள் 2018
வளர்ந்து வரும் இளம் வீரர்: ரிஷப் பண்ட்
கண்ணியத்துடன் விளையாடிய அணி: மும்பை இந்தியன்ஸ்
சிறந்த கேட்ச்: போல்ட்
சூப்பர் ஸ்டிரைக்கர்: சுனில் நரைன்
ஸ்டைலிஷ் வீரர்: ரிஷப் பண்ட்
வித்தியாசமாக சிந்தனை உள்ள கேப்டன்: தோனி
அதிக விக்கெட்டுகள்: ஆண்ட்ரூ டை
அதிக ரன்கள்: கேன் வில்லியம்சன்
மதிப்புமிக்க வீரர் (தொடர் நாயகன்): நரைன்
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன்
2-ம் இடம்: ஹைதராபாத்
முதல் இடம்: சென்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு வாய்ப்பு!

மயிலாப்பூரில் த. வேலுவுக்கு எதிராக தமிழிசை சௌந்தர்ராஜன்!

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

புதுவை பிரசாரம்: சென்னை வந்தார் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

