ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐஎஸ்எல்: அரையிறுதியில் கேரளம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது.

News image
கோலடித்த மகிழ்ச்சியில் கேரள வீரர் வினீத்.
Updated On :4 டிசம்பர் 2016, 7:50 pm

DIN

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் 6-ஆவது வெற்றியைப் பெற்ற கேரள அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியபோதும், புள்ளிகள் பட்டியலில் 22 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. அதநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட நார்த் ஈஸ்ட் அணி, போட்டியிலிருந்து வெளியேறியது.
கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின.
இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் அபாரமாக ஆடின. 66-ஆவது நிமிடத்தில் கேரள வீரர் வினீத்திடம் பந்து செல்ல, அவர் வேகமாக கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினார். அப்போது நார்த் ஈஸ்ட் வீரர்கள் அவரைச் சூழ்ந்தனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட வினீத் 30 யார்ட் தூரத்தில் இருந்தபடி, கோல் கம்பத்தை நோக்கி பந்தை பறக்கவிட, அது கோலானது. இதையடுத்து ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது.
இதன்பிறகு உத்வேகம் பெற்ற கேரள அணி தாக்குதல் ஆட்டத்தில் களமிறங்கியது. அதேநேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி சரிவிலிருந்து மீள்வதற்கு போராடியது. எனினும் கோல் எதுவும் விழவில்லை.
இறுதியில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

புள்ளிகள் பட்டியல்
அணி

மும்பை 14 6 5 3 23
கேரளம் 14 6 4 4 22
டெல்லி 14 5 6 3 21
கொல்கத்தா 14 4 8 2 20
நார்த் ஈஸ்ட் 14 5 3 6 18
புணே 14 4 4 6 16
சென்னை 14 3 6 5 15
கோவா 14 4 2 8 14


அரையிறுதி ஆட்டங்கள்

முதல் அரையிறுதி (முதல் சுற்று)
டிச.10: கொல்கத்தா-மும்பை, இடம்: கொல்கத்தா
2-ஆவது அரையிறுதி (முதல் சுற்று)
டிச.11: கேரளம்-டெல்லி,
இடம்: கொச்சி
முதல் அரையிறுதி (2-ஆவது சுற்று)
டிச.13: மும்பை-கொல்கத்தா, இடம்: மும்பை
2-ஆவது அரையிறுதி (2-ஆவது சுற்று)
டிச.14: டெல்லி-கேரளம்,
இடம்: தில்லி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.