மும்பை டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் இங்கிலாந்து!

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் , நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில்6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள்...  
மும்பை டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் இங்கிலாந்து!

மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் , நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள்  எடுத்து தடுமாறி  வருகிறது.

இந்தியா இங்கிலானது அணிகள்  மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நான்காம் நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 631 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலமாக இங்கிலாந்தை விட 231 ரன்கள் கூடுதலாக பெற்றது.

இந்திய அணித்தலைவர் விராத் கோலி 235 ரன்களும், 9-ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இந்தியாவின் ஜெயந்த் யாதவ் 104 ரன்களும்  எடுத்து இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட உதவினர்.

இங்கிலாந்து சார்பாக ரஷீத் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி ஆகிய இருவரும் தலா 2 விக்கட்டுளை வீழ்த்தினர்.

பின்னர் தனது இரண்டாவது இன்னங்க்ஸை துவக்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணித்தலைவர் குக் 18 ரன்கள் எடுத்திருந்த பொழுது ஜடேஜா பந்துவீச்சில் 'எல்பிடபிள்யூ' முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஜென்னிங்ஸ் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். அவருக்கு பின் களம் புகுந்த மொயீன் அலி ஜடேஜா வீசியாய் பந்தில் 'டக் அவுட்' ஆகி வெளியேறினார்.   

பின்னர் மத்திய வரிசை ஆட்டக்காரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 112 பந்துகளில் 77 ரன்களை எடுத்து, ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் 'எல்பிடபிள்யூ' முறையில் ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு யாரும் சிறப்பாக விளையாடாத காரணத்தால், இங்கிலாந்து மேலுமிரண்டு விக்கெட்டுகளை இழந்தது.அந்த இரண்டு விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தினார்.

எனவே இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 47.3 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து உள்ளது.

இறுதியாக பெர்ஸ்டவ் 50 ரன்களுடன் களத்தில் உள்ளார்.இந்தியாவை விட இங்கிலாந்து இன்னும் 49 ரன்கள் பின் தங்கியுள்ளதால், இந்த போட்டியில்  இந்தியாவின் வெற்றி எளிதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com