மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னை டெஸ்ட்: இந்தியா உணவு இடைவேளையின் போது 173/1 

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:36 am

DIN

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்று பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி , தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  477 ரன்கள் எடுத்து.

பின்னர் நேற்று தந்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் பார்த்திவ் படேல் 28 ரன்களுடனும், ராகுல் 30 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று இன்று இந்தியா தனது ஆட்டத்தை தொடர்நது. சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும், அரைசதம் அடித்தனர். நன்கு விளையாடி வந்த பார்திவ் படேல் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலி பந்துவீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 

பின்னர் களமிறங்கிய புஜாரா நிதானமாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது, இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 89 ரன்களுடனும், புஜாரா 11 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.