இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதன் தொகுப்பு:
* இதற்கு முன்பு, இந்திய வீரர் சேவாக் மட்டுமே முச்சதம் எடுத்த ஒரே இந்திய வீரராக இருந்தார். அவர் இருமுறை முச்சதங்களை எடுத்துள்ளார். இப்போது முச்சதம் எடுத்த மற்றொரு இந்திய வீரராக
கருண் நாயர் உருவாகியுள்ளார்.
309 சேவாக்
319 - சேவாக்
303 - கருண் நாயர்
*25 வருடம் 13 நாள்களில் முச்சதம். எனவே, இச்சாதனையை செய்த இளம் வீரர்களில் ஒருவராக உள்ளார் கருண் நாயர். கேரி சோபர்ஸ் 21 வயதில் (21 வருடம் 216 நாள்களில்) முச்சதம் எடுத்ததே சாதனையாக உள்ளது. முச்சதம் எடுத்த இளம் வீரர்களின் பட்டியலில் கருண் நாயர் 6-ம் இடத்தில் உள்ளார்.
* முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர் கேரி சோபர்ஸ். அவர் 365 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சிம்ப்சன் 311 ரன்கள் எடுத்து 2-ம் இடத்திலும் கருண் நாயர் 303 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்திலும் உள்ளார்கள்.
* தனது முதல் முதல்தர சதத்தை மூன்றாம் போட்டியில் அடைந்தார் கருண் நாயர். இப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் சதத்தை முச்சதமாக எட்டியுள்ளார். அதேபோல மூன்றாவதுமுறையாக ஓர் இந்திய வீரர் முச்சதம் எடுத்துள்ளார். (முதலிரண்டு முச்சதம் - சேவாக்)
* 2014-15 ரஞ்சி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக முச்சதம் எடுத்தார் கருண் நாயர். இப்போது தமிழ்நாட்டில் முச்சதம் எடுத்துள்ளார்.
* இதற்கு முன்பு 6-வது டெஸ்ட் போட்டியில் லென் ஹட்டன் முச்சதம் எடுத்ததே குறைந்த டெஸ்டுகளில் முச்சதம் எடுத்த சாதனையாக இருந்தது. கருண் நாயர் தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே முச்சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார்
* கருண் நாயரின் முதல் 100 - 185 பந்துகள்; அடுத்த 100 - 121 பந்துகள்; மூன்றாவது 100 - 75 பந்துகள்.
* ஒரே நாளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்: 1. சேவாக் - 284 ரன்கள் (2009ல் இங்கைக்கு எதிராக), 2. சேவாக் - 257 ரன்கள் ( 2008ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக), 3. கருண் நாயர் - 232 ரன்கள்.
* டெஸ்ட் போட்டியில் சச்சினின் அதிகபட்ச ரன்கள் - 248*, லஷ்மண் - 281. இருவரையும் இன்று கடந்துள்ளார் கருண் நாயர்.
* அதிக முச்சதங்கள் உருவாக்கிய மைதானம்: 3 - ஆண்டிகுவா, லீட்ஸ்; 2 - ஓவல், பார்படாஸ், ஜமைக்கா, சென்னை சேப்பாக்கம்.
* இந்த முச்சதத்துக்கு முன்பு கருண் நாயரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்: 13.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

மின் கட்டணம்: கீரனூா் பகுதி மக்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தல்

அமெரிக்கா சென்ற மூதாட்டியின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


