இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 2012-ல் இங்கிலாந்திடம் கண்ட படுதோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. இந்த டெஸ்டின் முக்கிய புள்ளிவிவரங்கள்:
* முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வி கண்ட அணிகளில் இங்கிலாந்து அணி முதலிடம் பிடித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் 477 ரன்கள் எடுத்தபின்பும் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி கண்டது.
477 இங்கிலாந்து - இந்தியா, 2016
432 இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, 2001
407 பாகிஸ்தான் - இந்தியா, 2004
* இந்த வருடம் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை. 9 டெஸ்டுகளில் வென்றுள்ளது. ஒரு தோல்வியும் பெறாமல் ஒருவருடம் அதிக டெஸ்ட் வெற்றிகள் கண்ட அணி இங்கிலாந்து. 2004-ம் வருடம் ஒரு தோல்வியுமின்றி 11 வெற்றிகள் பெற்றது. அதேபோல ஆஸ்திரேலிய அணி 2006ம் வருடம் 10 வெற்றிகளைப் பெற்றது. 9 டெஸ்ட் வெற்றிகளுடன் இந்திய அணி மூன்றாம் இடத்தில் உள்ளது.
* இந்திய அணி இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடையாமல் உள்ளது. இதற்கு முன்பு, செப்டம்பர் 1985 - மார்ச் 1987 காலகட்டத்தில் தோல்வியின்றி 17 டெஸ்ட் போட்டிகள் விளையாடியதே சாதனையாக இருந்தது. அதை கோலி அணி முறியடித்துள்ளது. செப்டம்பர் 1985 - மார்ச் 1987 காலகட்டத்தில் இந்திய அணி 4 டெஸ்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால் கோலி அணி இந்த 18 டெஸ்டுகளில் 14 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
* 4-0 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்தியா. இதற்கு முன்பு முதல்தடவையாக 4-0 என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2012-13-ல் வென்றது. அதற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் 4-0 என வென்றுள்ளது இந்திய அணி.
* இதுவரை ஜடேஜா எடுத்த 106 விக்கெட்டுகளில் 16.03% விக்கெட்டுகள் எதிரணி கேப்டனின் விக்கெட்டுகளாகும்.
* இந்த டெஸ்ட் தொடரில் 655 ரன்கள் பெற்று தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார் கோலி.
* முதல் 22 டெஸ்டுகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்களில் மூன்றாம் இடத்தில் உள்ளார் கோலி. 17 - ஸ்டீவ் வாஹ், 15 - பாண்டிங், 14 - கோலி (மற்றும் 3 பேர்)
* இங்கிலாந்து இன்று:
104/0 - 39.3 ஓவர்கள்
103/10 - 48.3 ஓவர்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

விமானப்படை விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கட்டுப்பாடு

தோ்தல் பணியில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ உடல் அரசு மரியாதையுடன் தகனம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொகுதிகளுக்கு 22 முதல் 26 சுற்றுகளில் முடிவுகள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


