
புதுதில்லி
பிசிசிஐ அதிகாரிகளை கம்பம் ஒன்றில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிசிசிஐயின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நியமிக்கப்பட்ட நீதிபதி லோதா குழுவானது பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது.அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்க முடியாது என்று பிசிசிஐ அறிவித்து விட்டது.
மேலும் லோதா குழுவின் அறிக்கை குறித்து ஆராய்ந்து கருத்து கூறுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவை நியமித்தது பின்னர் அவர் பிசிசிஐ சீர்திருத்தங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விமர்சித்திருந்தார். மேலும் லோதா குழு அமைக்கப்பட்டதே செல்லாது என்றும் கட்ஜு கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் லோதா குழுவை சந்திக்க திட்டமிட்டிருந்த பிசிசிஐ அதிகாரிகளை சந்திக்க வேண்டாம் என்று அறிவுறித்திய கட்ஜு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில்முறையிடலாம் என்றும் பிசிசிஐக்கு அறிவுரை கூறியிருந்தார்.
இந்நிலையில் லோதா குழுவின் பரிந்துரைகளுக்கு, தற்போதைய பிசிசிஐ அதிகாரிகள் புரிந்து வரும் எதிர்வினைகளுக்கு, கட்ஜு கீழ்கண்டவாறு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
'இந்த நடைமுறை மட்டும் போதுமானதல்ல; நீதிபதி லோதா பிசிசிஐ அதிகாரிகளை ஒரு கமபத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடித்திருக்க வேண்டும்'
கட்ஜுவின் இந்த டிவிட் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.