கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து வீரர் செளதி விலகல்!

காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து  நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி விலகியுள்ளார்.

News image
Updated On :17 செப்டம்பர் 2016, 9:38 am

DIN

காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து  நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி விலகியுள்ளார்.

இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 12-ம் தேதி மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. அதற்குப் பிறகு அக்டோபர் 16 முதல் 29 வரை 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன.

நியூசிலாந்து அணியின் அனுபவம்மிக்க வேகப்பந்து வீச்சாளரான டிம் செளதி, காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். பயிற்சியின்போது அவருக்கு இடதுகாலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் காயத்திலிருந்து மீண்டபிறகு, ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. செளதிக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹென்றி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.