தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பயிற்சி போட்டி: சூர்யகுமார், பவார் சதம்!

மும்பை அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் அபாரமாக ஆடிய மும்பை அணி...

News image
Updated On :17 செப்டம்பர் 2016, 12:05 pm

DIN

மும்பை அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் அபாரமாக ஆடிய மும்பை அணி, 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பவாரும் சூர்யகுமார் யாதவும் சதம் அடித்தார்கள்.  

தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 75 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் 50, டாம் லேத்தம் 55 ரன்கள் எடுத்தார்கள். மும்பை தரப்பில் சாந்து 2 விக்கெட் எடுத்தார். பின்னர் ஆடிய மும்பை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில், 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்தது.

இன்று தொடர்ந்து ஆடிய மும்பை அணி, தேநீர் இடைவேளையின்போது 71 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  

இதன்பின்னர் சிறப்பாக ஆடிய பவார், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருமே சதம் எடுத்து அசத்தினார்கள். 2-ம் நாள் முடிவில், மும்பை அணி 103 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் எடுத்தது. 

86 பந்துகளில் 103 ரன்கள் குவித்த சூர்யகுமார் 8 சிக்ஸர்களை அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 7-வதாகக் களமிறங்கிய சித்தேஷ் லாட்-டும் அதிரடியாக ஆடி 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 62 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். தாரேவும் 53 ரன்களுடன் களத்தில் உள்ளார். 2-ம் நாள் முடிவில் மும்பை அணி, 103 ரன்களுடன் முன்னணியில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.