10-ஆவது ஐபிஎல் போட்டி ஹைதராபாதில் இன்று தொடக்கம்

10-ஆவது ஐபிஎல் போட்டி ஹைதராபாதில் இன்று தொடக்கம்
கோப்பையுடன்  8 அணிகளின் கேப்டன்கள்.
கோப்பையுடன் 8 அணிகளின் கேப்டன்கள்.

பஞ்சாப்
மேக்ஸ்வெல் (கேப்டன்), வருண் ஆரோன், ஹஷிம் ஆம்லா, அனுரீத் சிங், அர்மான் ஜாபர், கே.சி.கரியப்பா, மார்ட்டின் கப்டில், குருகீரத் சிங், மட் ஹென்றி, ஷான் மார்ஷ், டேவிட் மில்லர், இயான் மோர்கன், நிகில் நாயக், டி.நடராஜன், அக்ஷர் படேல், ரித்திமான் சாஹா, பர்தீப் சாஹு, டேரன் சமி, சந்தீப் சர்மா, மோஹித் சர்மா, ரிங்கு சிங், மார்கஸ் ஸ்டானிஸ், ஸ்வப்னில் சிங், ராகுல் டிவேட்டியா, ஷர்துல் தாக்குர், முரளி விஜய், மனன் வோரா, இஷாந்த் சர்மா.

பெங்களூர்
விராட் கோலி (கேப்டன்), சாமுவேல் பத்ரீ, அவேஷ் கான், ஸ்ரீநாத் அரவிந்த்,
ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திர சாஹல், அங்கீத் செளத்ரி, டிவில்லியர்ஸ், பிரவீண் துபே, கிறிஸ் கெயில், டிராவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னி, பவன் நெகி, ஹர்ஷல் படேல், சச்சின் பேபி, டேப்ரைஸ் ஷம்ஸி, பில்லி ஸ்டான்லேக், ஷேன் வாட்சன்.

டெல்லி
ஜாகீர்கான் (கேப்டன்),
அங்கித் பாவ்னே, கலீல் அஹமது,கோரே ஆண்டர்சன், முருகன் அஸ்வின், சாம் பில்லிங்ஸ், கார்லோஸ் பிரத்வெயிட், பேட் கம்மின்ஸ், ஷ்ரேயஸ் ஐயர், ஏஞ்செலோ மேத்யூஸ்,
சாமா மிலிந்த், அமித் மிஸ்ரா, முகமது சமி, கிறிஸ் மோரீஸ், சபேஸ் நதீம், கருண் நாயர், ரிஷப் பந்த்,பிரதியூஷ் சிங், காகிசோ ரபாடா, நவ்தீப் சைனி, சஞ்ஜு சாம்சன், சஷாங்க் சிங், ஆதித்ய தாரே, ஜெயந்த் யாதவ்.

கொல்கத்தா
கம்பீர் (கேப்டன்),
டிரென்ட் போல்ட், ரன் பிராவோ, பியூஷ் சாவ்லா, நாதன் கோல்ட்டர் நீல், காலின் டி கிராண்ட்ஹோம், ரிஷி தவன், சயான் கோஷ், ஷெல்டான் ஜாக்சன்,இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லின், சுநீல் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரூமன் பாவல், அங்கித் ராஜ்புட், சஞ்சய் யாதவ், ஷகிப் அல்ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ்.

புணே
ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்),
மயங்க் அகர்வால், அங்கித் சர்மா, பாபா அபராஜித், அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, தீபக் சாஹர், ராகுல் சாஹர், டேனியல் கிறிஸ்டியான், எம்.எஸ்.தோனி, அசோக் திண்டா, டூபிளெஸ்ஸிஸ், பெர்குசன், ஜேஸ்கரன் சிங், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், அஜிங்க்ய ரஹானே, செளரவ் குமார், பென் ஸ்டோக்ஸ், மிலிந்த் டான்டன், மனோஜ் திவாரி, ஜெயதேவ் உனட்கட், ஆடம் ஸம்பா.

மும்பை
ரோஹித் சர்மா (கேப்டன்),
ஜஸ்பிரித் பூம்ரா, ஜோஸ் பட்லர், ஷ்ரேயஸ் கோபால், கிருஷ்ணப்பா கெளதம், அசேலா குணரத்னே, ஹர்பஜன் சிங், மிட்செல் ஜான்சன், குல்வந்த் கெஜ்ரோலியா, சித்தேஷ் லேடு, மிட்செல் மெக்லீனாகான்,
லசித் மலிங்கா, ஹார்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, பார்த்திவ் படேல், கிரண் போலார்ட், நிகோலஸ் பூரன், தீபக் பூனியா, நிதிஷ் ராணா, அம்பட்டி ராயுடு, ஜிதேஷ் சர்மா, கரண் சர்மா, லென்டில் சிம்மன்ஸ், டிம் செளதி, ஜெகதீசா சுசித், செளரவ் திவாரி, வினய் குமார்.

குஜராத்
ரெய்னா (கேப்டன்),
ஆகாஷ்தீப் நாத், சுபம் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஃபாக்னர், ஆரோன் ஃபிஞ்ச், மன்பிரீத் கோனி, இஷன் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகாத்தி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கெளஷிக், தவல் குல்கர்னி, பிரவீண் குமார், பிரென்டன் மெக்கல்லம், முனாஃப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷெல்லி ஷெளர்யா, நாது சிங், டுவைன் ஸ்மித், தேஜாஸ் பரோக்கா, ஆண்ட்ரூ டை.

ஹைதராபாத்
டேவிட் வார்னர் (கேப்டன்),
தன்மாய் அகர்வால், ரிக்கி பூய், பிபுல் சர்மா, பென் கட்டிங், ஷிகர் தவன், இகலவியா துவிவேதி, மோசஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சித்தார்த் கெளல், புவனேஸ்வர் குமார், பென் லாஃப்லின், அபிமன்யூ மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஆசிஷ் நெஹ்ரா, நமன் ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், பரிந்தர் ஸ்ரன், பிரவீண் டாம்பே, கேன் வில்லியம்சன், யுவராஜ் சிங்.

*47 நாள்கள் -8 அணிகள் - 60 ஆட்டங்கள்
ஹைதராபாத், ஏப்.4: வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, அதிரடி, ஆக்ரோஷம், சிக்ஸர் மழை என ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைக்கும் 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாதில் புதன்கிழமை தொடங்குகிறது.
புதிய கேப்டன்கள், புதிய பயிற்சியாளர்கள், கேப்டன் பதவியின்றி களமிறங்கும் தோனி என ஏராளமான மாற்றங்கள் இந்த சீசனில் நிகழ்ந்துள்ளன. புணே அணியால் ரூ.14.5 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், பெங்களூர் அணியால் ரூ.12 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள டைமல் மில்ஸ் ஆகியோர் தங்களின் அணிக்காக வெற்றி தேடித்தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
கோலி, டிவில்லியர்ஸ்: அதிரடி பேட்ஸ்மேன்களான கோலி, டிவில்லியர்ஸ், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் போன்ற நட்சத்திரங்கள் இல்லாமல் தொடங்குகிறது இந்த சீசன். தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ள கோலி இந்த சீசனின் ஆரம்ப கட்ட ஆட்டங்களில் மட்டும்தான் விளையாடமாட்டாரா? அல்லது இந்த சீசன் முழுவதும் விளையாடமாட்டாரா என்பது அவருடைய உடற்தகுதி சோதனைக்குப் பிறகே தெரியவரும். டிவில்லியர்ஸின் நிலை குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை. அஸ்வின் முழுமையாக விலகிவிட்டார். ஜடேஜா போன்ற வீரர்கள் ஆரம்ப கட்ட ஆட்டங்களில் விளையாடவில்லை.
எனினும் கிறிஸ் கெயில், பிரென்டன் மெக்கல்லம், மேக்ஸ்வெல், தோனி, ரெய்னா, யுவராஜ் சிங், டுவைன் பிராவோ, டுவைன் ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் மில்லர், டேவிட் வார்னர், இயான் மோர்கன், போலார்ட் என ஏராளமான அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த முறையும் அதிரடிக்கும், சிக்ஸர் மழைக்கும் பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.
60 ஆட்டங்கள்: 47 நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இறுதி ஆட்டம் மே 21-ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெறுகிறது. டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ், ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஹைதராபாத்-பெங்களூர் இன்று மோதல்
ஐபிஎல் போட்டியில் புதன்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த முறை இறுதிச் சுற்றில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
பெங்களூர் அணியில் கேப்டன் கோலி, அதிரடி பேட்ஸ்மேன்களான டிவில்லியர்ஸ், கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். எனவே பெங்களூர் அணி பேட்டிங்கில் கெயில், இடைக்கால கேப்டனான வாட்சன், மன்தீப் சிங், கேதார் ஜாதவ், டிராவிஸ் ஹெட் ஆகியோரையே நம்பியுள்ளது. அதேநேரத்தில் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர், யுவராஜ் சிங், ஷிகர் தவன், மோசஸ் ஹென்ரிக்ஸ் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களோடு களம் காணுகிறது. முதல் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் வெற்றியோடு தொடங்க முயற்சிக்கும்.

தொடக்க விழா
இந்த முறை போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் சொந்த மைதானங்களிலும் தொடக்க விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 8 அணிகளும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் முதல் ஆட்டத்தை விளையாடும் தினத்தில் தொடக்க விழா நடைபெறும்.
ஹைதராபாதில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் பாலிவுட் நடிகை எமி ஜாக்சன் பங்கேற்று நடனமாடுகிறார். வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் என களை கட்ட காத்திருக்கிறது ஹைதராபாத்.

கேப்டன் பதவியின்றி களம் காணும் தோனி
கடந்த 9 சீசன்களில் 8-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், கடந்த சீசனில் புணே அணியின் கேப்டனாகவும் இருந்தார் தோனி. ஆனால் கடந்த சீசனில் புணே அணி மோசமாக விளையாடி 7-ஆவது இடத்தைப் பிடித்ததால் அவருடைய கேப்டன் பதவி பறிபோனது.
அதனால் முதல்முறையாக இந்த சீசனில் கேப்டன் பதவியின்றி ஒரு வீரராக களமிறங்குகிறார் தோனி. எனினும் ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளுக்கு (143) கேப்டனாக இருந்தவர், அதிக வெற்றிகளை (83) தேடித்தந்தவர் ஆகிய இரு சாதனைகளும் தோனியின் வசமேயுள்ளது.

சாதிப்பாரா நடராஜன்?
இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கும் தமிழக ஆல்ரவுண்டர் டி.நடராஜன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் ஏலத்தின்போது நடராஜனுக்கு ரூ.10 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவர் ரூ.3 கோடிக்கு ஏலம் போனார். சேலம் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன், 20 வயது வரையில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடியவர். அதன்பிறகு இந்திய அணிக்காக ஆடும் கனவோடு, சென்னைக்கு இடம்பெயர்ந்த நடராஜன், தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் மூலம் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் அதில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போது ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ள அவர், முத்திரைப் பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் தமிழக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com