வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் ஓய்வு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக..

News image
Updated On :8 ஏப்ரல் 2017, 10:13 am

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கானும் அறிவித்துள்ளார். கேப்டன் மிஸ்பாவும் இதே தொடருடன் ஓய்வு பெறவுள்ளார்.

இது தொடர்பாக 39 வயதான யூனிஸ் கான் கூறியதாவது: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே நான் விளையாடவிருக்கும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர். நாட்டுக்காக எப்போதும் என் திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். மக்கள் இந்த நேரத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிடவேண்டாம் என்றார்கள். ஆனால் நான் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்றார். யூனிஸ் கான் 115 டெஸ்டுகள் விளையாடியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அடுத்ததாக யூனிஸ் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.